Thursday 2nd of May 2024 05:07:39 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?-12.11.2019

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?-12.11.2019


மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் தேவை இல்லாத மன உளைச்சல் அதிகரிக்கும். தடைகளை தாண்டி செயல்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன் மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. அலுவலகத்தில் முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொறுமையுடன் செயல் படவேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: தைரியம் மற்றும் தன்னம் பிக்கையுடன் செயல்பட்டு காரிய சாதனை செய்வீர்கள். பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இனிமையான நாள்.

கடகம்

கடகம்: உங்கள் நேர்மறை எண்ணங்களால் சாதனைகள் புரிவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டினை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: வீணான கோபத்தையும், மன வருத்தத்தையும் தவிர்க்க நினைப்பீர்கள். குடும்பத்தின் வசதிவாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னி யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் வீண் கோபத்தையும் மன உளைச்சலையும், குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிக்க முயற்சி செய்வீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகளும் சிந்தனையுமே காரணம் என்று, உணர்ந்து திருத்திக்கொள்ள முயற்சி செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும் நாள்.

துலாம்

துலாம்: கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் விஷயங்கள் நடைபெறும். தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். புதிய நண்பர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரி ஆதரிப்பார். இனிமையான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: வழக்குகளின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். உயர் அதிகாரிகள் அதிசயிக் கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு

தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்ப டைக்க கூடாது என்று முடிவுஎடுப்பீர்கள். பழைய பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்

மகரம்: வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் பழுதை சரி செய்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலை ஆட்களின் ஆதரவுக் கிடைக்கும். தாயுடன் சில மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கையால் ஜெயிப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.

மீனம்

மீனம்: தம்பதிகள் ஒருவரை யொருவர் நன்கு புரிந்துக்கொள்வீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE